News December 6, 2024
விவசாயிகளின் டிமாண்ட்ஸ் என்ன?

டெல்லி சலோ போராட்டத்தில் களமிறங்கியுள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் இவை. *பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான லீகல் கேரண்டி *விவசாய கடன் தள்ளுபடி, விவசாயி/ விவசாய கூலிகளுக்கு ஓய்வூதியம், மின்சார கட்டண உயர்வு தடுப்பு, போராட்ட வழக்குகள் தள்ளுபடி, லக்ஷ்மிபூர் கேரி வன்முறை வழக்கில் நீதி *நிலம் கையகப்படுத்தல் சட்டம் 2013 மீண்டும் கொண்டுவருதல், உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்.
Similar News
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க சிறப்பு சலுகை!

அட்சய திருதியையொட்டி பல நகைக் கடைகள் தங்கம் வாங்கச் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விற்பனை குறைந்துள்ளது. இதனால், இன்று பவுனுக்கு குறிப்பிட்ட சதவீத விலை குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தை விற்பனை செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன. அட்சய திருதியை நாளான இன்று(ஏப்.30) தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News April 30, 2025
நாளை சூரியின் ட்ரீட்!

‘மாமன்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக, சூரி அறிவித்துள்ளார். ஹீரோவாக அறிமுகமானது முதல் இதுவரை சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, தற்போது முதன்முறையாக குடும்ப உறவுகள் பற்றிய படத்தில் நடித்துள்ளதால், இப்படத்தை அவர் பெரிதும் நம்பியுள்ளார். அதேபோல், ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ‘விலங்கு’ வெப்சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
News April 30, 2025
தொகுதியை டிக் செய்த விஜய்.. இங்கேயா போட்டி?

2026 தேர்தலில் கோவையில் விஜய் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான், முதல் பூத் கமிட்டி கருத்தரங்கை அங்கு நடத்தியதாம், அங்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை பார்த்து முடிவெடுக்கலாம் என தவெக தரப்பு நினைத்ததாம். ஆனால், நினைத்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததால், ஏறக்குறைய அத்தொகுதியை விஜய் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற தொகுதிகளிலும் பல்ஸ் பார்க்கப்படுமாம்.