News January 1, 2025
2025ல் உங்களுக்கே நீங்க சொல்ல நினைக்கும் Advice என்ன

புத்தாண்டு தொடங்கிவிட்டது. பல புதிய கனவுகள் இருக்கும். பல புது முயற்சிகள் மேற்கொள்ள திட்டம் போட்டிருப்பீர்கள். இந்த ஆண்டில் பல விஷயங்களை செய்து முடித்திட வேண்டும் என பலர் பல resolution-ம் எடுத்திருப்பீர்கள். இந்த ஆண்டில் நான் இதை நிச்சயமாக தவிர்த்து விட வேண்டும் என உங்களுக்கே நீங்கள் ஒரு Advice சொல்லிக்க வேண்டுமென்றால் என்ன சொல்வீர்கள்? கமெண்ட்டில் சொல்லுங்க….
Similar News
News September 11, 2025
CM ஸ்டாலின் வீட்டில் துயரம்.. தலைவர்கள் நேரில் அஞ்சலி

CM ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி(80) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை OMR-ல் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது. வேதமூர்த்தியின் உடல் கொட்டிவாக்கம் AGS காலனியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொழிலதிபர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News September 11, 2025
SPORTS ROUNDUP: Boxing-ல் இந்திய வீராங்கனை அசத்தல்!

*உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மகளிர் 80 கிலோ பிரிவில் நுபுர் ஷியாரன்(IND) 4-1 என சோடிம்போவாவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து Semi-க்கு முன்னேறினார்.
*உலக கோப்பை கால்பந்து: தகுதிச்சுற்றில் ஈகுவடாரிடம் 1- 0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா தோல்வி. இப்போட்டியில் மெஸ்ஸி விளையாடவில்லை.
*Pro kabbadi: யு மும்பா அணியை 45-37 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தெலுகு டைட்டன்ஸ்.
News September 11, 2025
உதயநிதி ஸ்டைலில் அன்புமணி எடுத்த செங்கல்!

2021 தேர்தல் பிரசாரத்தின்போது, எய்ம்ஸ் ஹாஸ்பிடலின் கட்டுமான பணிகள் தொடங்கப்படாததை விமர்சிக்கும் வகையில், AIIMS என எழுதப்பட்ட செங்கலை காட்டி உதயநிதி பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், கடலூரில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக திமுக அரசால் நாட்டப்பட்ட அடிக்கல்லை தேடி கண்டுபிடித்து கொண்டு வந்ததாக, அன்புமணி கூறினார். கல்லூரி கட்டுமானத்தை அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.