News February 28, 2025
என்னய்யா இது இட்லிக்கு வந்த சோதனை!

இந்தியாவிலேயே ஃபாரின் மாதிரி இருக்குற ஊர் நம்ம கோவா. வெளிநாட்டு டூரிஸ்ட் நெறஞ்சு இருப்பாங்க. ஆனா, திடீர்னு அவங்களோட வருகை ராக்கெட் வேகத்துல குறஞ்சு போச்சாம். என்னவா இருக்கும்னு எல்லோரும் யோசிச்சுக்கிட்டு இருந்தாங்க. அப்ப எம்எல்ஏ லோபோ, பீச்சுல இட்லி, சாம்பார், வடா பாவ் விற்குறது தான் இதுக்கு காரணம்னு சொன்னாரு பாருங்க மொத்த தென்னிந்திய சமஸ்தானமும் ஆடிப்போச்சு. உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 10, 2026
தனிமையில் இருப்பதால் இத்தனை நோய்கள் வருமா?

சிலர் எப்போது பார்த்தாலும் தனிமையிலேயே இருப்பார்கள். என்றைக்காவது தனியாக இருந்தால் பிரச்னை கிடையாது. ஆனால், நண்பர்கள், குடும்பத்தினர், பொழுதுபோக்கு என எதற்கும் நேரம் செலவிடாமல் எப்போதுமே தனிமையிலேயே இருப்பது, இதய நோய், ஸ்ட்ரோக், சர்க்கரை போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதாக கேம்பிரிட்ஜ் பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. நரம்பு அமைப்பு & ஹார்மோன் சமநிலையை பாதிப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படுகிறதாம்.
News March 10, 2026
அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்: அமீர்

விஜய்யின் அரசியல் வருகையை அடுத்து அவரை <<19318052>>அமீர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.<<>> இந்நிலையில் கரூர் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு CBI சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், ‘CBI விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிராதீங்க; அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்’ என விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் வெளியான அமீரின் பதிவு SM-ல் கவனம் பெற்றுள்ளது.
News March 10, 2026
ஒளவையார் பொன்மொழிகள்

*ஒருவனிடத்திலே காணப்படும் நல்ல முயற்சிகளுக்கெல்லாம் அப்போது பயன் இல்லையாயினும் பின்னே பலன் உண்டாகும். *காரியங்களைப் பிறர் குறிப்பறிந்து செய்பவரே அறிவுடையவர். *சோம்பலே தீமைக்கும் துன்பத்திற்கும் பிறப்பிடம். *அடக்கமுள்ளவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடு நேரும். *உங்கள் நண்பர்களிடமும் உங்கள் ஏழ்மை நிலையைப் பற்றிப் பேசாதீர்கள்.


