News April 15, 2025
என்ன மாயம்..! இளம் நடிகை போல் மாறிய குஷ்பு

குஷ்பு X-ல் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்த்த பலர் இது உண்மைதானா இல்லை AI வேலையா என எண்ணும் அளவுக்கு உள்ளது. எடை குறைந்து மாடர்ன் டிரெஸில் குஷ்புவை பார்க்கும் போது இளம் நடிகை போல் காட்சியளிக்கிறார். முதல் படத்தில் பார்த்த அ அதே லுக்குடன் 54 வயதிலும் இருக்கிறார் என்றால் என்ன சொல்வது. இதனிடையே அவரை கிண்டல் செய்து பதிவிட்டவர்களுக்கு குஷ்பு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
Similar News
News April 16, 2025
10 நிமிடத்தில் வீட்டிற்கே வரும் சிம் கார்டு

சிம் கார்டுகளை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்வதற்காக, டெலிவரி பார்ட்னராக பிளிங்கிட்டை ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. சிம் டெலிவரி சேவை, சென்னை, ஐதராபாத், புனே, மும்பை உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் கிடைக்கும். சிம் கார்டு டெலிவரி செய்யப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின்படி, ஆதார் அடிப்படையிலான KYC அங்கீகாரத்தைப் பயன்படுத்தி எண்ணை செயல்படுத்தலாம்.
News April 16, 2025
காலை 7 மணி வரை மழை

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இருப்பினும், காலை 10 மணிக்கு மேல் வெயிலும் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
வரலாற்றில் இன்றைய தினம்

> அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது (1862)
> ஜாலியன் வாலா பாக் படுகொலையை கண்டித்து காந்தி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார் (1919)
> கியூபாவை ஒரு பொதுவுடைமை நாடு என்று பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார் (1961)
> முதலாவது உலக தமிழ் மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது (1966)