News March 16, 2024
தண்ணீர் பஞ்சத்தால் IT ஊழியர்களுக்கு ‘WFH’

பெங்களூருவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், IT ஊழியர்கள் Work From Home வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் அல்லாடி வரும் சூழலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இயற்கை உபாதையை கழிக்க அருகிலுள்ள மால்களை தேடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிலைமை சரியாகும் வரை வீட்டிலிருந்து பணிபுரிய ஐடி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
Similar News
News December 10, 2025
கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது: EPS

திமுக ஆட்சியில் உடல் உறுப்புகளை கூட விட்டு வைக்கவில்லை என EPS விமர்சித்துள்ளார். திமுக MLA செய்த கிட்னி திருட்டை, திமுகவே விசாரித்தது என்ற அவர், அதனால்தான் இவ்விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு வந்தபின், கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
News December 10, 2025
₹12 ஆயிரம் போட்டால் ₹40 லட்சம் கிடைக்கும் மாஸ் திட்டம்!

போஸ்ட் ஆபீஸின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் (PPF) மூலம் மாதம் ₹12,500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகள் கழித்து ₹40.68 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். அதாவது, ஒவ்வொரு மாதமும் ₹12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்தம் ₹22.5 லட்சம் இருக்கும். அத்துடன், அரசின் 7.1% வட்டி விகிதத்தை சேர்த்தால் ₹40.68 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைய போஸ்ட் ஆபீஸுக்கு செல்லுங்கள். SHARE.
News December 10, 2025
210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும்: EPS

திமுக தலைவர்கள் அதிமுகவை விமர்சிப்பது கேலிக்கூத்தாக உள்ளது என EPS கூறியுள்ளார். பல தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை பெற்ற அதிமுகவை பற்றி தெரியாமல் CM பேசுவதாக கூறிய அவர், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும் என சூளுரைத்தார். மேலும், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததை பற்றி மட்டுமே விமர்சிக்க முடியுமே தவிர, தங்கள் ஆட்சியில் எந்த குறையும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


