News May 27, 2024

தென்னாப்பிரிக்காவை வாஷ் அவுட் செய்த வெஸ்ட் இண்டீஸ்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது வெஸ்ட் இண்டீஸ். நேற்று இரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்கா 163/7 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய வெ.இண்டீஸ் 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய ஜான்சன் சார்லஸ் 26 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.

Similar News

News September 17, 2025

யூசுஃப் பதான் அரசு நில ஆக்கிரமிப்பாளர்: கோர்ட்

image

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் நில ஆக்கிரமிப்பாளர் என குஜராத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பிரபலங்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்றும் கண்டித்துள்ளது. அவரது வீட்டிற்கு அருகே இருந்த அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கடந்த 2012-ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நிலத்தை வாங்க விரும்புவதாக அவர் தாக்கல் செய்த மனுவை சமீபத்தில் கோர்ட் நிராகரித்தது.

News September 17, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 17, புரட்டாசி 1 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.30 PM – 5.00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சுன்யதிதி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.

News September 17, 2025

நீங்க எவ்வளவு நேரம் ஸ்கிரீன் பாக்குறீங்க?

image

காலை அலாரம் அடித்தவுடன் எழுந்திருப்பதில் தொடங்கி, இரவு தூங்கும் வரை டிஜிட்டல் ஸ்கிரீனை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால், வெறும் 1 மணி நேரம் ஸ்கிரீன்களை பார்ப்பதாலேயே Myopia எனும் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் அபாயம் 21% உள்ளதாக JAMA Network Open ஆய்வில் தெரியவந்துள்ளது. 3.35 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. நீங்க எவ்வளவு நேரம் ஸ்கிரீன் பாக்குறீங்க?

error: Content is protected !!