News June 18, 2024

மேற்கிந்திய தீவுகள் அணி வரலாற்று சாதனை

image

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில், பவர் பிளேயில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் படைத்துள்ளது. ஆஃப்கன் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில், விளையாடிய WI, முதல் 6 ஓவர்களில் 92/1 ரன்களை குவித்தது. இதன் மூலம் அந்த அணி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக 2014இல், அயர்லாந்துக்கு எதிராக நெதர்லாந்து எடுத்த 91 ரன்களே, பவர் பிளேயில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

Similar News

News March 18, 2026

CPI-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

image

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(CPI) 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் முன்னிலையில் சற்றுமுன் தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை கையெழுத்தானது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு தளி மற்றும் பவானிசாகர் தொகுதிகளில் வெற்றி பெற்ற CPI-க்கு இத்தேர்தலில் ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது.

News March 18, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

image

தங்கம் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவைக் கண்டுள்ளது. சென்னையில், இன்று(18.03.2026) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 குறைந்து ₹14,570-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,16,560-க்கு விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையான போர் பதற்றத்திற்கு மத்தியிலும் கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது கவனிக்கத்தக்கது.

News March 18, 2026

திமுக கூட்டணியில் மோதல் வெடித்தது

image

திமுக கூட்டணியில் வெளிப்படையாகவே மோதல் வெடித்துள்ளது. கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட குறைவான இடங்களை பெற்றுக்கொள்ளுமாறு திமுக தரப்பிலிருந்து தங்களிடம் சொன்னதாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிவிட்டதாகவும் CPM மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். அதேபோல், <<19412554>>திருமாவும்<<>> தொகுதிகளை குறைக்க முடியாது என கூறிவிட்டாராம். இதனால், திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!