News October 2, 2025
சிராஜின் வேகத்தில் திக்குமுக்காடும் வெ.இண்டீஸ்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது. டாஸ் வென்று களமிறங்கிய அந்த அணிக்கு சிராஜ் பெரும் நெருக்கடியை கொடுத்து வருகிறார். டேகனரின் (0), அதனஸ்(12), பிராண்டன் கிங்(13) உள்ளிட்டோரின் விக்கெட்டை சிராஜ் அடுத்தடுத்து வீழ்த்தினார். பும்ராவும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி திக்கு முக்காட வைத்துள்ளார். 59/4 என்ற நிலையில் வெ.இண்டீஸ் உள்ளது.
Similar News
News October 2, 2025
திருமா திமுகவில் சேர்ந்து விடலாம்: வினோத் பி.செல்வம்

திருமாவளவன் கட்சியை கலைத்துவிட்டு, திமுகவில் சேர்ந்து விடலாம் என பாஜக மாநிலச் செயலர் வினோத் பி.செல்வம் விமர்சித்துள்ளார். கரூர் துயரத்தில் உயிரிழந்த 15 பேர் பட்டியலின மக்களுக்கு சேர்த்துதான் பாஜக போராடுகிறது எனக் கூறிய அவர், கரூர் சம்பவத்தில் திமுகவுக்கு திருமா முட்டு கொடுப்பதாக விமர்சித்தார். மேலும், கரூர் துயரத்தில் உண்மையை கண்டறியும் பாஜகவின் முயற்சி ஒருபோதும் நிற்காது எனவும் தெரிவித்தார்.
News October 2, 2025
விஜய் உணர்வுப்பூர்வமாக வருந்தவில்லை: திருமாவளவன்

கரூர் துயரத்தில் உணர்வுப்பூர்வமாக விஜய் வருந்தவில்லை என திருமாவளவன் விமர்சித்துள்ளார். அவர் முகத்தில் எந்த சோகமும் தெரியவில்லை என்றும் CM ஸ்டாலினை சீண்டுவதே அவரது நோக்கமாக உள்ளது எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வீட்டில் இரங்கல் கூட்டத்தை கூட நடத்தாமல், மூன்று நாள்கள் அமைதியாக இருந்துவிட்டு, கரூர் விஷயத்தில் பாஜகவினர் பேசிய பிறகே விஜய் வீடியோ வெளியிட்டதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News October 2, 2025
பெங்களூரு நகரின் டாப்-5 சுற்றுலா தலங்கள்

வீக் எண்டில் ₹1,500 பட்ஜெட்டில் எங்காவது சுற்றுலா செல்ல பிளான் பண்றீங்களா? பெங்களூரு, அதற்கு நல்ல சாய்ஸ். சென்னையில் இருந்து ரயிலில் 2S வகுப்பில் சென்றுவர ₹400 மட்டுமே கட்டணம் என்பதால், குறைந்த செலவில் பல இடங்களுக்கு செல்லலாம். குறிப்பாக சர்ச் ஸ்ட்ரீட் சென்றால் ஆடைகள், எலக்ட்ரானிக் பொருள்களை சீப் அண்ட் பெஸ்டாக வாங்கி வரலாம். நீங்க பெங்களூரு சென்றிருக்கிறீர்களா? உங்க யோசனை என்ன?