News May 3, 2024

T20WCக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

image

பவல் தலைமையில் டி20 உலகக் கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அணியில், பவல் (கேப்டன்), அல்ஜாரி ஜோசப் (துணை கேப்டன்), ரசல், நிக்கோலஸ் பூரன், ரூதர்ஃபோர்ட், ஷெப்பர்ட், சார்லஸ், சேஸ், ஹெட்மயர், ஹோல்டர், ஹோப், அகீல் ஹோசன், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், மோதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணி கோப்பையைக் கைப்பற்றுமா?

Similar News

News November 17, 2025

BREAKING: அமைச்சர் காந்தி ஹாஸ்பிடலில் அனுமதி

image

கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வேலூரில் உள்ள சிஎம்சி ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல்நலக் குறைவுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இன்று மாலை கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2025

ராசி பலன்கள் (17.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News November 17, 2025

ஹாஸ்பிடலில் இருந்து சுப்மன் கில் டிஸ்சார்ஜ்

image

இந்திய அணியின் கேப்டன் கில் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸின்போது அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டது. இந்நிலையில் கில்லுக்கு கழுத்து வலி குறைந்திருந்தாலும், அவர் 4-5 நாள்கள் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, அவர் கவுஹாத்தியில் நவ.22-ல் நடைபெறவுள்ள 2-வது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

error: Content is protected !!