News July 27, 2024
வெஸ்ட் இண்டீஸ் 244 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 282 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக பிராத்வெய்ட் 61, ஹோல்டர் 59 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி வெ.இண்டீசின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முதல்நாள் முடிவில் இங்கிலாந்து 38/3 ரன்கள் எடுத்து 244 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
Similar News
News March 4, 2026
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?

காங்கிரஸுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என TKS இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் போராடி வருகிறது. <<19287048>>ப.சிதம்பரம், ஸ்டாலின் சந்திப்பை அடுத்து<<>> தொகுதி பங்கீடு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தை தொடரும் என கூறியது திமுக – காங்., உறவில் விரிசல் உள்ளதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
News March 4, 2026
நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் அடுத்த அதிர்ச்சி!

நாங்குநேரி சின்னதுரை விவகாரத்தில் கைதான இருவர், தற்போது <<19286535>>இரட்டை கொலை சம்பவத்தில்<<>> மீண்டும் கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரியில் இன்று நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் <<16124472>>மாணவர் சின்னதுரையை சாதி வெறுப்புடன்<<>> கொடூரமாக தாக்கியதில் கைதான சுபாஷ், கல்யாணி என்ற இருவர், இந்த சம்பவத்தில் மீண்டும் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 4, 2026
ராசி பலன்கள் (04.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


