News August 22, 2025

மேற்கு ஆசிய மோதல்கள்: மேக்ரான் உடன் மோடி பேச்சு

image

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் PM மோடி தொலைபேசியில் உரையாடினார். வாஷிங்டனில் ஐரோப்பா, உக்ரைன், USA தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற உரையாடலின் முக்கிய கருத்தை மேக்ரான் பகிர்ந்ததாக மோடி கூறியுள்ளார். உக்ரைன் & மேற்கு ஆசிய பகுதிகளில் உள்ள மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஆதரவை இந்தியா தொடர்ந்து வழங்கும் என மோடி உறுதியளித்தார். இரு நாடுகளிடையேயான மூலோபய கூட்டாண்மை குறித்தும் பேசினர்.

Similar News

News March 5, 2026

கரூர்: பெண் விபரீத முடிவு!

image

தோகைமலை அருகே உள்ள கொசூர் ஒட்டப்பட் டியை சேர்ந்த பெத்தாயி (50). கணவரை பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்து வந்தநிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகன் இறந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த பெத்தாயி அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். உறவினர்கள் பெத்தாயியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 5, 2026

மக்களுடன் தான் தவெக கூட்டணியா?

image

காங்., உடன் கைகோர்க்கலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தவெகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பண்ருட்டி ராமச்சந்திரன், முஸ்தபா ஆகியோர் விஜய்க்கு ஆதரவளித்தாலும், பெரிய கட்சியான காங்., வரும் என்ற நம்பிக்கை சிதைந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ‘மக்களுடனே கூட்டணி’ என்ற நிலைப்பாட்டை விஜய் விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

News March 5, 2026

மொத்தமாக ₹8,500 சம்பள உயர்வு.. இன்ப அதிர்ச்சி

image

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இதன்படி, <<19299732>>டாஸ்மாக்<<>> ஊழியர்களுக்கு மேலும் ₹1,000 சம்பளம் உயர்வு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக <<19242295>>₹2,500<<>> சம்பளம் உயர்வு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ₹5,000 உயர்த்தி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் அந்தந்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.

error: Content is protected !!