News March 27, 2025
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்?

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கொடுத்த வாக்குறுதியை வேத வாக்காக நினைத்துச் செயல்படுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீதி நியாயத்துக்குக் கட்டுப்படும் நீங்கள் தன்மானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விசுவாசமான நீங்கள் நம்பிக்கை துரோகிகளை மன்னிக்கவே மாட்டீர்கள் என்று நந்தி வாக்கியம் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News November 20, 2025
விஜயகாந்த் மரணம்.. வடிவேலு முதல்முறை கண் கலங்கினார்

விஜயகாந்த் மறைவின்போது வடிவேலு செல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், கேப்டன் மறைவின் போது சென்றிருந்தாலும், அவரை இப்படி திட்டிவிட்டு எதற்காக இப்போது வந்தார் என கேட்டிருப்பார்கள் என வடிவேலு வருத்தத்துடன் பகிர்ந்ததாக நடிகர் குரு லக்ஷ்மன் கூறியுள்ளார். விஜயகாந்த் சொர்க்கத்தில் தான் இருப்பார் என்று கூறி, வடிவேலு கண் கலங்கியதாகவும் உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
கவர்னர் விவகாரத்தில் SC-யின் 2 மாறுபட்ட விளக்கங்கள்

*மாநில சட்டப்பேரவையின் மசோதா மீது முடிவெடுக்க 1 முதல் 3 மாதம் கெடு விதித்தது ஏப்.8-ல் SC வழங்கிய தீர்ப்பு. இன்றைய தீர்ப்பில் காலக்கெடு நீக்கப்பட்டது *பிரிவு 201-ன் கீழ் ஜனாதிபதிக்கு இருந்த காலக்கெடுவும் ‘நியாயமான காலத்துக்குள்’ என மாற்றப்பட்டது. *காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்கவில்லை எனில், ஒப்புதல் அளித்ததாக கோர்ட் முடிவு செய்யும் என்பதும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
நீங்கள் எதை இழந்து வருகிறீர்கள்?

இத்தனை வருடமாக வேலைக்கு செல்லும் நீ எவ்வளவு சேமித்து வைத்துள்ளாய்? என்ற கேள்வி, நீங்கள் வேலை பார்க்க தொடங்கிய அடுத்த சில ஆண்டுகளில் கேட்கும் ஒன்றாகவே இருக்கும். பணத்தை சேர்க்க முடியாததற்கு நம்மில் பல காரணங்கள் இருக்கலாம். அதேபோல், வருமானத்தை நோக்கி பயணிக்கும் நேரத்தில் உறவுகள், நண்பர்கள், சுப நிகழ்வுகள், திருவிழாக்கள் என பலவற்றை இழக்கிறோம். உங்கள் வாழ்க்கை ஓட்டத்தில் நீங்கள் இழந்தது என்ன?


