News August 19, 2024
கிணற்றுத் தவளை இபிஎஸ்: அண்ணாமலை

கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை பற்றி இபிஎஸ் கிணற்றுத் தவளை போல் பேசி வருவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இபிஎஸ் எதிர்க்கட்சி தலைவராக இருக்க தகுதியானவரா? என்று கேள்வி எழுப்பிய அவர், கள்ள உறவு வைக்கும் அளவுக்கு பாஜக தீண்ட தகாத கட்சி அல்ல என்றும் தெரிவித்தார். 5 முறை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு, நாணயம் வெளியிட்டதில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 22, 2026
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கால அவகாசம்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வரும் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ECI தெரிவித்துள்ளது. இந்த <
News March 22, 2026
கிரிப்டோ கரன்சி முதலீடு.. ₹30 கோடி மோசடி

சென்னையில் கிரிப்டோ முதலீடு என்ற பெயரில் ₹30 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. TFT Blockchain என்ற நிறுவனம் கிரிப்டோவில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 20% வரை நிலையான வருமானம் தருவதாக ஆசை வார்த்தை கூறி நூற்றுக்கணக்கானவர்களை ஏமாற்றியது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடந்து வருகிறது. ஆருத்ரா கோல்டு, நியோ மேக்ஸ் போன்ற பெரிய நிதி நிறுவன மோசடிகளை தொடர்ந்து, இந்த கிரிப்டோ மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
News March 22, 2026
தமிழக வளர்ச்சிக்கு திராவிட மாடல் தேவை: CM ஸ்டாலின்

அடுத்த 5 ஆண்டுகளில் துறைவாரியாக தான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகள் குறித்து CM ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தொழில்துறை சார்பில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒவ்வொருவருக்கும் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட 14 இலக்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் அரசு தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


