News October 9, 2025
வார விடுமுறை.. அரசு முக்கிய தகவல்

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 855 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சொந்த ஊர் செல்லும் மக்களின் நலன் கருதி கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 10-ம் தேதி 315 பேருந்துகளும், 11-ம் தேதி 310 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூர், உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 230 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
Similar News
News October 9, 2025
வர்த்தகம் தொடர்பாக மோடியை சந்திக்கும் பிரிட்டன் PM

2 நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் பிரிட்டன் PM கீர் ஸ்டார்மரை, மும்பையில் PM மோடி சந்தித்து பேச உள்ளார். சமீபத்தில் பிரிட்டன் சென்றிருந்த PM மோடி, அந்நாட்டுடன் தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தார். அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருவரும் இணைந்து Global Fintech Fest என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்றனர்.
News October 9, 2025
21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 9, 2025
விஜய்யை அடிமை என சொன்னாரா உதயநிதி?

பழைய அடிமை EPS மட்டுமின்றி, இப்போது புது அடிமைகளையும் பாஜக வலைவீசி தேடுவதாக DCM உதயநிதி விமர்சித்துள்ளார். நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும் என பொடிவைத்து பேசிய அவர், அதிமுகவின் துணையோடு பாஜக அனைத்தையும் செய்வதாக கூறினார். மேலும், எத்தனை அடிமைகள் வந்தாலும் கருப்பு, சிவப்பு அணிந்திருக்கும் திமுககாரன் இருக்கும் வரை தமிழகத்தை தொட்டுக்கூட பார்க்கமுடியாது என அவர் சவால்விட்டிருக்கிறார்.