News April 28, 2025
காவலர்களுக்கு வார விடுமுறை.. உறுதி செய்த ஐகோர்ட்

காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை, வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வார விடுமுறை வழங்குவது தொடர்பான அரசாணையை முறையாக நடைமுறை படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்ட ஐகோர்ட், விடுமுறை வழங்க தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 10, 2025
ஏன் கோயிலுக்கு சென்றால் சில நேரங்கள் அமர வேண்டும்!

சிவன் கோயிலுக்கு சென்றால், சில நிமிடமாவது அமர்ந்துவிட்டு வரவேண்டும். காரணம், சிவன் கோவிலில் இருந்து எதையுமே வீட்டுக்கு கொண்டு வரக் கூடாது என்பதால், சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு புறப்பட வேண்டும். ஆனால், பெருமாள் கோயிலுக்கு சென்றால், நேரடியாக வீட்டுக்கு வந்துவிடலாம். காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்கினால், வருமானம் அதிகரித்து, செல்வம் பெருகும் என்பது ஐதீகம். SHARE IT.
News August 10, 2025
கன்னட திரையுலகை ஆட்டிவைக்கும் ‘கூலி’!

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவர இருக்கும் ‘கூலி’ படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ப்ரீ புக்கிங்கிலேயே வெளிப்படுகிறது. கன்னட திரையுலகின் மெகா ஹிட் படமான ‘KGF 2’-வை விட பெங்களூருவில் ‘கூலி’ படத்துக்கு தான் அதிக புக்கிங் ஆகியுள்ளது. ‘கூலி’ படத்துக்கு வெறும் 37 நிமிடங்களில் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ளன. அதே நேரத்தில், KGF 2-க்கு 45 நிமிடங்களில் தான் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்றன.
News August 10, 2025
4 ஆண்டுகளில் 50% உயர்ந்த மின் கட்டணம்: CITU சவுந்தரராஜன்

TN-ல் கடந்த 4 ஆண்டுகளில் 50% மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக சவுந்தரராஜன் கூறியுள்ளார். கடலூரில் TNEB அமைப்பின் 18-வது மாநில மாநாட்டில் பேசிய அவர், மின்சாரம், போக்குவரத்து துறைகளில் லாபம், நஷ்டம் பார்க்கக்கூடாது எனவும் சேவை நோக்குடன் இயக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், தொழிலாளர்களுக்கு எதிராக பல துறைகளில் தனியார்மயமாக்கல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார்.