News April 22, 2025
போலீசுக்கு வார விடுமுறை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

2021-ல் போலீசுக்கு வார விடுமுறை வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தக் கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வார விடுமுறை தொடர்பான அரசாணையை போலீஸ் உயரதிகாரிகள் பின்பற்றாதது ஏன்? காவலர்களுக்கு சங்கங்கள் இல்லாதது ஏன்? என அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் டிஜிபி விரிவான பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News April 22, 2025
6 குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்!

தலைப்பை படித்தவுடன் ஷாக்காக வேண்டாம். ஹரியானாவில், 2 சகோதரர்கள் குழந்தைகளின் திருமண செலவை குறைக்க நினைத்து, இந்த யோசனையை கண்டுபிடித்துள்ளனர். தங்களது 6 பிள்ளைகளுக்கும் அவர்கள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். 2 மகன்களுக்கு திருமணம் கடந்த 18-ம் தேதியும், 4 மகள்களுக்கு 19-ம் தேதியும் திருமணம் செய்யப்பட்டது. ஊருக்கு இதுவும் ஒரு நல்ல மெசெஜ் தானே!
News April 22, 2025
கிரிக்கெட் விளையாடியதற்கு வருந்துகிறேன்: Ex- கேப்டன்

முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீனின் பெயர் ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அசாருதீன், சில நேரங்களில் கிரிக்கெட் விளையாடியதற்கு வருந்துகிறேன். கிரிக்கெட்டை பற்றி புரிதல் இல்லாதவர்கள், வழிநடத்தும் இடத்தில் இருப்பதைப் பார்ப்பது மனம் உடைகிறது. இது கிரிக்கெட்டுக்கு அவமானம் என அசாருதீன் தெரிவித்துள்ளார். அவரின் பெயரை நீக்கியது சரியா?
News April 22, 2025
சவுதி செல்லும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவுதி புறப்பட்டுச் செல்கிறார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின்பேரில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், எரிசக்தி, ராணுவம், வணிகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.