News March 13, 2025
வார விடுமுறை: 966 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார விடுமுறையை முன்னிட்டு, 966 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்கவுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 14ஆம் தேதி 270 பஸ்கள், 15ஆம் தேதி 275 பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து 14, 15ஆம் தேதிகளில் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 14, 15ஆம் தேதிகளில் தலா 20 பஸ்களும் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News March 13, 2025
மாசி மக பெளர்ணமியில் ஈசனை வழிபடுவோம்!

மாசி மக பெளர்ணமியான இன்று சிவ வழிபாடு அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்தும். சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் சந்திக்கும் நாள் தான் பெளர்ணமியாக கூறப்படுகிறது. இன்றைய தினத்தில் சூரிய, சந்திர வழிபாடும் எடுத்த காரியத்தில் வெற்றியைத் தரும். அதிலும் மாசி மாதத்தில் வரும் இந்த நிறைந்த பெளர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதும் சாலச் சிறந்தது.
News March 13, 2025
14 கடைகளில் கொள்ளை: ஷாக்கான திருடர்கள்

மஹாராஷ்டிராவின் தானேவில் ஒரே இரவில் 14 கடைகளில் நடந்த கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதிர்ச்சியடைந்தது கடைகாரர்கள் அல்ல; கொள்ளையர்கள்தான். 14 கடைகளில் 8ல் மட்டுமே கல்லா பெட்டியில் பணம் இருந்துள்ளது. மற்ற கடைகளில் இல்லை. கிடைத்த பணமும் வெறும் ₹27,000 தான். காரணம் அனைத்துமே UPI பரிவர்த்தனை. இதனால் பெரிய இழப்பில் இருந்து தப்பியிருப்பதாக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் கடைகாரர்கள்.
News March 13, 2025
ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா?

காசா, உக்ரைன் போர்களில் மத்தியஸ்தராக செயல்பட்ட அமெரிக்க சிறப்பு பிரதிநிதி விட்காஃப் இந்த வாரம் மாஸ்கோ செல்லவுள்ளார். உக்ரைன், தனது பிடிவாதத்தை விட்டு இறங்கியதை அடுத்து, போர் நிறுத்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்திருக்கிறது அமெரிக்கா. ரஷ்யாவுடன் பேசி போரை நிறுத்த, விட்காஃபை மாஸ்கோவுக்கு அனுப்பவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். புதினும் இதற்கு சம்மதிப்பார் என டிரம்ப் நம்புகிறார்.