News March 1, 2025
வார இறுதி விடுமுறை.. 600 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகத்தால் 600 அரசு சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நேற்று 245, இன்று 240 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து நேற்றும், இன்றும் தலா 51 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து நேற்றும், இன்றும் தலா 20 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News March 1, 2025
பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கணவன்

உ.பி.யில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை நிர்வாணமாக்கி, கணவன், குடும்பத்தினர் பாலியல் சித்ரவதை செய்துள்ளனர். கணவனுக்கு ரூ.50 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக அளித்ததாகவும், குழந்தை பெற்றபிறகு ரூ.10 லட்சம், கார் கேட்டு கொடுமைப்படுத்தி, இயற்கைக்கு மாறான உறவுக்கு கட்டாயப்படுத்துவதாகவும் பெண் புகார் கூறியுள்ளார். இதையடுத்து, கணவன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
News March 1, 2025
சதம் விளாசிய கருண் நாயர்

ரஞ்சி டிராஃபி கிரிக்கெட் தொடரில் விதர்பா அணி வீரர் கருண் நாயர், சதம் விளாசி அசத்தியுள்ளார். கேரளாவுக்கு எதிரான போட்டியின் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய அவர், 132 (280) ரன் குவித்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். இத்தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயர், இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 86 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிருஷ்டவசமாக அவர் ரன் அவுட்டானார்.
News March 1, 2025
சீமான் பாதுகாவலருக்கு ஜாமின்

சீமான் வீட்டின் பாதுகாவலர் அமல்ராஜ், பணியாளர் சுபாகர் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. நடிகை கொடுத்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க ஒட்டிய சம்மனை கிழித்தது, போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு வழக்கில் மட்டும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.