News April 30, 2024
பாகிஸ்தானில் இணைய தள சேவை கடும் பாதிப்பு

கடலுக்கு அடியில் செல்லும் கேபிள் சேதமடைந்ததால், பாகிஸ்தானில் இணைய தள சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர்-பாகிஸ்தான்-ஐரோப்பாவை இணைக்கும் கேபிள், கடலுக்கு அடியில் செல்கிறது. இந்த கேபிள், 5 இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் இணைய தள சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணி முடிந்து, இணைய தள சேவை மீண்டும் இயல்புக்கு வர ஒரு மாதம் ஆகும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News March 30, 2026
BREAKING: பிரசாரத்தை ரத்து செய்தார் விஜய்

CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை முடிந்த பின் வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொளத்தூரில் பேசி முடித்த உடனேயே, வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு விஜய் கிளம்பி போய்விட்டார். போலீசாரின் பாதுகாப்பு குறைபாடே பிரசாரம் ரத்து செய்யப்பட காரணம் என புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
News March 30, 2026
ஈரான் போர்.. முதல் தமிழர் மரணம் PHOTO

ஈரானின் ஏவுகணை தாக்குதலால் குவைத்தில் தமிழர் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்தான கிருஷ்ணன் குவைத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். ஈரான் தாக்குதலில் அவர் உயிரிழந்த செய்தி அறிந்து குடும்பத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உரிய இழப்பீடு வழங்குமாறும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 30, 2026
சீன CCTV-களுக்கு தடை… ஆக்ஷனில் மத்திய அரசு

ஏப்ரல் 1 முதல் Hikvision, TP-Link, Dahua போன்ற சீன CCTV கேமராக்கள் மற்றும் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. நாட்டில் விற்கப்படும் CCTV தயாரிப்புகளுக்கு கண்டிப்பாக அனுமதி(STQC சான்றிதழ்) பெற வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இண்டர்நெட்டுடன் சேர்ந்து இயங்கும் இந்த கேமராக்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதே இதற்கு காரணம். நாட்டில் 3-ல் 1 சீன CCTV ஆக உள்ளது.


