News September 24, 2025
திமுகவுக்கு விசுவாசம் காட்டும் செல்வப்பெருந்தகை: EPS

செல்வப்பெருந்தகை காங்கிரஸுக்கு விசுவாசமாக இல்லாமல் திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார் என EPS விமர்சித்துள்ளார். யாசகம் கேட்போர் எப்படி ஒட்டு போட்ட சட்டை அணிந்திருப்பார்களோ, அதுபோல செல்வபெருந்தகை பல கட்சிகளில் இருந்துவிட்டு காங்கிரஸுக்கு வந்திருப்பதாக EPS சாடியுள்ளார். அவர் காங்கிரஸ்காரர் போல் செயல்படாமல் திமுகவை தாங்கிப்பிடிக்கும் வேலையை மட்டுமே செய்வதாகவும் EPS பேசியுள்ளார்.
Similar News
News September 24, 2025
ரத்த சோகை நீங்க இதை சாப்பிடுங்க

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் 1 சாப்பிட்டு வந்தால் பல உடல்நல பிரச்னைகள் தீரும். உடலில் ரத்தம் தூய்மை அடைவதுடன் ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படும் என்றும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் பிரச்னைகள் குணமாகும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் வெள்ளைப்படுதலுக்கு தீர்வு காண பெண்கள் இதை சாப்பிடலாம். SHARE IT.
News September 24, 2025
ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது: EPS

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்டதால், ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டதாக EPS கூறியுள்ளார். நீலகிரி பிரசாரத்தில் பேசிய அவர், மிசாவில் திமுகவினர் கைதானதற்கு காரணமான காங்., உடனே கூட்டணி வைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், அறிவாலய மேல் மாடியில் CBI, ED சோதனை செய்தபோது, கீழ் தளத்தில் காங்., உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திமுக தான் அடிமை என்றும் EPS விமர்சித்துள்ளார்.
News September 24, 2025
மின்னல்கள் கூத்தாடும் ஏரி.. அதிசயமான போட்டோஸ்!

வெனிசுலாவின் மையத்தில் அமைந்துள்ள மரகைபோ ஏரி, அதன் தனித்துவமான சுற்றுச்சூழலால் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்த்தாலும், ஏரிக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது மின்னல்களின் அசாதாரண நிகழ்வுதான். இங்கு மின்னல்கள் இல்லாத இரவே இல்லை. ஆண்டுக்கு சுமார் 300 இரவுகளில் இங்கு மின்னல்கள் ஏற்படுகிறது. இந்த ஏரி, “உலகின் மின்னல் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அதிசயம் உலகில் வேறு எங்கும் இல்லை.