News April 1, 2025

பலமிழக்கும் செவ்வாய்: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமழை

image

மேஷம், விருச்சிக ராசி அதிபதியான செவ்வாய் பகவான், தற்போது மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். இவர், ஏப்ரல் 3ம் தேதி அதிகாலை 1.32 மணிக்கு சந்திரனின் ராசியான கடக ராசிக்கு பெயர்ச்சியாகி நீசம் அடைய உள்ளார். நீசமான செவ்வாய் மிதுனம், கன்னி, விருச்சிகம், கும்பம் ராசிகளுக்கு பதவி உயர்வு, தொழிலில் லாபம், சமூகத்தில் மரியாதை என பலவிதத்தில் அதிர்ஷ்ட பலனைத் தரக்கூடியவராகத் திகழ உள்ளார். இந்தத் தகவலை பகிருங்கள்.

Similar News

News April 3, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 225 ▶குறள்: ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். ▶பொருள்: பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

News April 3, 2025

சொந்த மண்ணில் இந்திய அணி எதிர்கொள்ள உள்ள அணிகள்

image

நடப்பு ஆண்டில் இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளின் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணியுடன் 2 டெஸ்ட், 3 ODI, 5 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி நவ.14ஆம் தேதி தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நவ.30ஆம் தேதி தொடங்குகிறது.

News April 3, 2025

அரசு பதவியில் இருந்து நீக்கப்படும் மஸ்க்?

image

எலான் மஸ்கிற்கு கொடுக்கப்பட்ட பணிகள் முடிந்ததும், அவர் சிறப்பு அரசு பணியில் (DOGE தலைவர்) இருந்து விடுவிக்கப்படுவார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தனது தொழிலில் கவனம் செலுத்தினாலும், அவர் தொடர்ந்து டிரம்பின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக செயல்படவே வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

error: Content is protected !!