News January 24, 2025
என் விருதைக் காணோம்: கஞ்சா கருப்பு புகார்

நடிகர் கஞ்சா கருப்பு தனது கலைமாமணி விருதைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் குடியிருக்கும் தன்னை ஹவுஸ் ஓனர் திடீரென காலி செய்யும்படி கூறியதாகவும், அவகாசம் தரும்படி கேட்டதற்கு சம்மதித்ததாகவும் அவர் கூறினார். எனினும், தான் மதுரை சென்றிருந்தபோது பூட்டிய வீட்டை உடைத்து, வொயிட் வாஷ் செய்ததாகவும், அதில் தனது வி்ருது தொலைந்துவிட்டதாகவும் நொந்து கொண்டார்.
Similar News
News December 10, 2025
சேலம்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

சேலம் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
திருப்பரங்குன்றம் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா மற்றும் பெரிய வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் SC வரை சென்றுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 10, 2025
சுபகாரியங்களுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?

சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களிலும், கல்யாண வீடுகளிலும் முகப்பு பந்தலில் வாழை மரம் கட்டுவது தமிழர்களின் வழக்கம். அதில் வாழைப்பழ குலையும் தொங்கும். இதற்கான காரணம் தெரியுமா? வாழையடி வாழையாக குலம் தழைத்து வாழவேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்யப்படுகிறது. மேலும், வாழையின் இலை, பூ, காய், கனி என எல்லாமும் பயன்படுவது போல, நாமும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது அர்த்தமாகும்.


