News September 28, 2024
யாரிடமும் காப்புரிமை கேட்க மாட்டோம்: பிரேமலதா

திரைப்படங்களில் கேப்டனின் பாடல், போஸ்டர்களைப் பயன்படுத்தினால் யாரிடமும் காப்புரிமையெல்லாம் கேட்க மாட்டோம் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து என்றும் பெருமிதம் தெரிவித்தார். சண்முகப்பாண்டியன் நடிக்கும் படங்களிலும் கேப்டன் பாடல் இடம்பெறும் என்றார். ‘லப்பர் பந்து’ படத்தில் விஜயகாந்தின், ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 16, 2025
நாய், மாடு வரிசையில் தற்போது குதிரைகள் தொல்லை!

சென்னை சாலைகளில் நாய்களும், மாடுகளும் குறுக்கே வந்து விபத்துகள் நிகழ்வது போல, கோவையில் குதிரைகளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. வெள்ளக்கிணறு பிரிவு அருகே ஸ்கூட்டியில் தாயாரும், அவரது இரு மகன்களும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக குறுக்கே சில குதிரைகள் ஓடி வந்துள்ளன. பிரேக் அடிப்பதற்குள் குதிரை இடித்துவிட, மூவரும் நடு ரோட்டில் பொத்தென கீழே விழுந்தனர்.
News December 16, 2025
புதுச்சேரியில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்

புதுச்சேரிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். SIR பணிகளுக்கு முன்பு 8.51 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 7.64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதேநேரம், நீக்கப்பட்ட வாக்காளர்களில் தகுதியானவர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க, தேவையான ஆவணங்களுடன் ஜன.15 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.
News December 16, 2025
₹21 டூ ₹1,00,000 வரை தங்கத்தின் விலை கடந்து வந்த பாதை!

ஏழைகளுக்கு மட்டுமில்லை, நடுத்தர வர்க்கத்தினருக்கும் எட்டாக் கனியாக மாறிவிட்டது தங்கம். ஒரு காலத்தில் ₹21-க்கு விற்கப்பட்ட இந்த தங்கம், இன்று ₹1,00,000 கடந்துவிட்டது. தங்கத்தின் விலை கடந்து வந்த பாதையை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். நீங்க கடைசியா வாங்குனப்போ தங்கம் எவ்வளோ விலையில் இருந்தது?


