News June 30, 2024
2026 தேர்தலிலும் மகத்தான வெற்றிபெறுவோம்

அடுத்த 2 ஆண்டுகளிலும் ஈடு இணையற்ற திட்டங்களை தீட்டித்தந்து 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றிபெறுவோம் என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்வு முடிவுகளை சட்டமன்றத் தொகுதி வாரியாகப் பார்த்தால் திமுக 221 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்றவர், இதன் மூலம் மக்கள் மனதில் யார் உள்ளார்கள் என்பது நன்றாகத் தெரிவதாக கூறியுள்ளார்.
Similar News
News September 20, 2025
டி20-ல் இந்தியா அரிய சாதனை

சர்வதேச டி20-யில் 250 போட்டிகள் என்ற மைல்கல்லை இந்திய அணி எட்டியுள்ளது. நேற்றைய ஓமன் உடனான போட்டியின் போது இந்திய அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இருப்பினும், அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அணிகளின் பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 275 போட்டிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்திலும், 235 போட்டிகளுடன் நியூசிலாந்து 3-ம் இடத்திலும் உள்ளது.
News September 20, 2025
இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஓய்வு

இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகளாக ரயில்களை இயக்கி வந்த சுரேகா யாதவ் ஓய்வு பெற்றுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், 1989-ல் ரயில்வேயில் துணை ஓட்டுநராக பணியை தொடங்கினார். இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர், சரக்கு ரயில், பயணிகள் ரயில்களை இயக்கியுள்ளார். அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்ற நிலையில், வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
News September 20, 2025
அடுத்த ஆண்டு சீனா செல்லும் டிரம்ப்

இந்தியா உடன் விரோதத்தை வளர்க்கும் டிரம்ப், சீனாவுடன் நட்பை வளர்க்கிறார். கடந்த 3 மாதங்களில் முதல் முறையாக சீன அதிபர் ஜின்பிங்குடன் அவர் தொலைபேசியில் பேசியுள்ளார். பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தென் கொரியாவில் நடக்க உள்ள ஆசிய பசிபிக் வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் சீன அதிபரை சந்திக்க உள்ளதாகவும், சீனாவிற்கு அடுத்த ஆண்டு பயணம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.