News October 26, 2025
ஆப்கன் மீது மீண்டும் போர் தொடுப்போம்: பாக்., அமைச்சர்

துருக்கியில் நடந்துவரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் ஆப்கன் மீதான போரை மீண்டும் தொடங்குவோம் என பாக்., அமைச்சர் கவாஜா எச்சரித்துள்ளார். ஆப்கன் அமைதியை விரும்புவது தெரிவதாகவும், அதனால் அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்கனில் தீவிரவாதிகள் இருப்பதாக கூறி, பாக்., வான்வழி தாக்குதலை நடத்தியதால், இருநாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.
Similar News
News January 20, 2026
கோயிலுக்குச் செல்லும் பொழுது..

எப்போதும் கோயிலுக்கு செல்லும் போது, சில விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் *பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது *வெறும் கையுடன் செல்லாமல், குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும் *குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது * கைலி, தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது *ஈர துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. SHARE IT.
News January 20, 2026
போராட்டத்தை முடித்து வைங்க: நயினார்

<<18902841>>சத்துணவு ஊழியர்களுடன்<<>> பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தினை முடித்து வைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போராட்டம் அறிவித்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான சான்று என்றும், போராட்டத்தால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்ஃஃ.
News January 20, 2026
இன்று ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று முதல் (ஜன.,20) தொடங்குகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் காலை 9:30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர், கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.


