News January 20, 2025
கோப்பையை வெல்ல முயற்சிப்போம்: ரோஹித் ஷர்மா

சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முயற்சிப்போம் என ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். ஐசிசி தொடர்களில் நாட்டிற்காக விளையாடுவது எப்போதும் பெருமையான தருணம் என்று குறிப்பிட்ட அவர், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று அதனை வான்கடே மைதானத்திற்கு கொண்டு வர முயற்சிப்போம் என்றார். 140 கோடி மக்களின் ஆதரவு உள்ளதால், வெற்றியை நோக்கி, இந்திய வீரர்களின் செயல்பாடு இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
தமிழக அரசியலில் வியப்பான நகைப்பு: H.ராஜா

மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர், குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மகளிர் தின வாழ்த்து கூறுவதாக H.ராஜா விமர்சித்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வது தமிழக அரசியலில் பார்க்க முடிந்த வியப்பான நகைப்பு என்றும் விமர்சித்துள்ள அவர், மனைவி, குழந்தைகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு, அதே நபர் மேடைகளில் பெண்ணுரிமை குறித்து பேசுவதாக சாடியுள்ளார். யாரை சொல்கிறார்?
News March 7, 2026
கச்சா எண்ணெய் விவகாரம்.. US-க்கு இந்தியா கொடுத்த பதில்

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த 30 நாள் காலக்கெடுவை நிராகரித்த இந்தியா, அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. தங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும், தேசத்தின் நலனே முக்கியம் எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் எங்கு மலிவாக கிடைக்கிறதோ அங்கு வாங்குவோம் என்றும் தெரிவித்துள்ளது.
News March 7, 2026
TN தேர்தல் தேதி.. வெளியானது ALERT

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறும் என்று கூறப்படும் தகவல் உண்மையல்ல என்று அரசின் TN Fact Check தெரிவித்துள்ளது. தற்போதைய தமிழக அரசின் பதவிக்காலம் மே 10-ம் தேதி முடிவடையும் என்று ECI அறிவித்துள்ளது. ஆனால், தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றும், இந்த தவறான தகவலை நம்ப வேண்டாமெனவும் TN Fact Check விளக்கம் அளித்துள்ளது.


