News March 12, 2025
முஸ்லிம் MLAக்களை தூக்கி எறிவோம்: பாஜக மூத்த தலைவர்

மேற்குவங்க தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததும் முஸ்லிம் எம்எல்ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து தூக்கி எறிவோம் என்று பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பட்ஜெட் தொடர் முழுதும் சுவேந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மம்தா அரசு நிர்வாகம் முஸ்லிம் லீக் நிர்வாகம் போல செயல்படுவதாக சாடினார். அவரது பேச்சுக்கு மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2025
பள்ளி இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு இறுதித்தேர்வு ஏப்ரல் 1 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு இறுதித்தேர்வு ஏப்ரல் 8 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
News March 12, 2025
‘அநாகரிகத்தின் அடையாளமே பாஜக அரசுதான்’

திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். நாகரிகத்தை பற்றி பாஜக, நமக்கு பாடம் எடுக்கிறது. நாகரிகத்தை உலகுக்கே முதலில் சொல்லிக் கொடுத்தது தமிழர்கள்தான். அநாகரிகத்தின் அடையாளமே மத்திய அரசு பாஜக அரசுதான் என்பது நாட்டுக்கே தெரியும். எங்களிடமே வரி வசூலித்துவிட்டு எங்களுக்கே நிதி கொடுக்காமல் இருப்பதுதான் நாகரிகமா? என ஸ்டாலின் வினவினார்.
News March 12, 2025
இந்திக்கு பதிலாக இந்தியாவை வளருங்கள்: ஸ்டாலின்

மோடி என்றால் வளர்ச்சி என பாஜகவினர் கூறுகிறார்களே, அப்படி என்ன இந்தியாவை அவர் வளர்த்துவிட்டார்? என ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதுதான் வளர்ச்சியா? என வினவிய அவர், இந்திக்கு பதிலாக இந்தியாவை வளர்க்கும் வழியை பாருங்கள் என்றும் சாடினார். மேலும், உயிரே போனாலும் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம் எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.