News September 5, 2025
செங்கோட்டையனுக்கு துணையாக நிற்போம்: OPS

அதிமுக தொண்டர்கள் மனதில் நினைத்துள்ளதை செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளதாக OPS கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என நினைக்கும் செங்கோட்டையனுக்கு, உறுதுணையாக நிற்போம் எனவும் அவர் கூறியுள்ளார். தொண்டர்கள் பிரிந்துள்ளதால் 4, 5 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற முடியவில்லை என்றும், தேர்தலில் வெற்றி பெற பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 5, 2025
SK- ARM காம்போ வென்றதா? மதராஸி Review & Rating

வட இந்தியாவிலிருந்து வரும் சட்ட விரோதமாக தமிழகத்திற்கு வரும் துப்பாக்கிகளை அழிக்க, போலீஸ் அதிகாரி பிஜூ மேனன், மன நோயாளியான SK-வை தேர்ந்தெடுக்க, அதற்கு பிறகு நடப்பதே கதை. ப்ளஸ்: SK கச்சிதமாக நடித்துள்ளார். வித்யூத் ஜம்வால் மிரட்டிவிட்டார். அனிருத் இசை பல காட்சிகளை மெருகேற்றுகிறது. ARM பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார். பல்ப்ஸ்: அடுத்த என்ன நடக்க போகிறது என ஈஸியாக கணிக்க முடிகிறது. Rating: 2.25/5.
News September 5, 2025
இனி இவர்களுக்கு ₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, அண்மையில் TNPSC, TRB உள்ளிட்ட அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகளை பெற்றவர்களின் குடும்பத்தினர், மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தால் இனி ₹1,000 வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பயனாளிகளை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்டறிந்து நீக்க உள்ளார்களாம்.
News September 5, 2025
காதல் அம்பு விடும் அனுபமா பரமேஸ்வரனின் கிளிக்ஸ்

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று பிஸியாக உள்ள அனுபமா, இன்ஸ்டாவில் அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற ஆடையில், ஸ்டெயிலிஷான லுக்கில் அவர் பகிர்ந்த போட்டோஸ் இப்போது டிரெண்டாகியுள்ளது. இளைஞர்களை கவர்ந்திழுக்கும் போட்டோஸ் மேலே இணைக்கப்பட்டுள்ளன. கண்டு ரசியுங்கள்…