News April 24, 2025
இந்தியாவிற்கு துணை நிற்போம்: இஸ்ரேல் PM மீண்டும் உறுதி

PM மோடியை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசிய இஸ்ரேல் PM நெதன்யாகு பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். இந்தியாவிற்கு எப்போதும் துணை நிற்போம் என நெதன்யாகு மோடியிடம் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டி காட்டுமிராண்டி தனமாக நடந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி நெதன்யாகுவிடம் விரிவாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.
Similar News
News January 6, 2026
ஆட்சியில் பங்கு கேட்டோம்: மாணிக்கம் தாகூர்

ஆட்சியில் பங்கு குறித்து எந்த காங்கிரஸ் MLA-வும் கேட்கவில்லை என RS பாரதி கூறியதற்கு, ஆதாரத்துடன் காங்., MP மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார். கூட்டணி பேச்சு வார்த்தையில் ஆட்சியில் பங்கை கேட்டு பெற வேண்டும் என்று காங்., பேரவை தலைவர் ராஜேஷ்குமார் கூறியதை தனது x பதிவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக ’<<18774878>>அதிகார பகிர்வு<<>> பற்றி பேச வேண்டிய நேரமிது’ என மாணிக்கம் தாகூர் பேசியிருந்தார்.
News January 6, 2026
தங்கம், வெள்ளி விலை.. ALL TIME RECORD

இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம், வெள்ளி விலை அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளி விலை இன்று (ஜன.6) கிராமுக்கு ₹5 உயர்ந்து ₹271-க்கு விற்கப்படுகிறது. இதனால் பார் வெள்ளி, 1 கிலோ ₹5,000 உயர்ந்து ₹2,71,000-க்கு விற்பனையாகிறது. நேற்று பார் வெள்ளி ₹9,000 உயர்ந்த நிலையில், இரண்டே நாளில் ₹14,000 உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. SHARE.
News January 6, 2026
திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீபத் தூண் தொடர்பான வழக்கில் அரசின் மேல் முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கை அரசு அரசியல் நோக்கில் அணுகியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட அரசே காரணம் எனவும் நீதிபதிகள் பரபரப்பு கருத்தையும் தெரிவித்துள்ளனர். மேலும், மலையில் தீபம் ஏற்றலாம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.


