News June 5, 2024
பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: சந்திரபாபு நாயுடு

டெல்லியில் நடைபெறும் என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். பாஜக, ஜன சேனா, தெ.தே.க ஆகியவை இணைந்து பணியாற்றியதால் தான் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், என்.டி.ஏ கூட்டணியில் தான் தெலுங்கு தேசம் கட்சி நீடிக்கிறது எனக் கூறி கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Similar News
News August 28, 2025
தலைகீழாக விலை குறையப்போகிறது

தீபாவளி பரிசாக GST வரியில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. சிமென்ட்-க்கான 28% வரியை 18% ஆகவும், அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சலூன் மற்றும் அழகு நிலைய சேவைகளுக்கான வரியை 18%லிருந்து 5% ஆகவும், உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கான வரியை 5% ஆகவும் குறைக்க வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்கள், சிமெண்ட், அழகு சாதன பொருள்கள் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 28, 2025
முகூர்த்த தினம்.. கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு

ஆவணி மாதத்தில் அதிக முகூர்த்த தினங்கள் வருவதால், கூடுதல் டோக்கன்கள் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150, இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். அதிகளவில் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்கள், 12 தட்கல் டோக்கன்களோடு 4 கூடுதல் டோக்கன்களும் வழங்கப்படும்.
News August 28, 2025
ஜம்முவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இன்று அதிகாலையிலேயே நடந்த தீவிரவாத தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு & காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் ராணுவத்தினர் மற்றும் அம்மாநில போலீஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.