News February 16, 2025

சட்டசபையில் செங்கோலை வைப்போம்: தமிழிசை

image

தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கையால் தமிழக சட்டசபையில் செங்கோலை வைத்த பின்னரே, சட்டசபைக்குள் நுழைவோம் என்றும், இது தனது சபதம் எனவும் அவர் சூளுரைத்தார். மேலும், மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய அவர், ‘இன்னொரு மொழியை கற்றால்தான் வளர்ச்சி; தமிழ் தமிழ் என பேசுபவர்களால் தமிழை பிழையின்றி பேச முடியுமா?’ என்றும் கேள்வியெழுப்பினார்.

Similar News

News November 25, 2025

ஆவடி: மனநல காப்பகத்தில் பெண் மர்ம மரணம்

image

திருவள்ளூர்: ஆவடியில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேற்று(நவ.24) மர்மமான முறையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் மகன், தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

News November 25, 2025

Ro-Ko இல்லாததால் தள்ளாடுகிறதா இந்தியா?

image

தற்போது கவுகாத்தி டெஸ்டில் இந்திய அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. இந்திய அணியின் இந்த நிலைக்கு, கோச் கம்பீரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், இதில் மற்றுமொரு பரிமாணமும் உள்ளது. ரோஹித், கோலி ஆகியோர் இருந்திருந்தால், சொந்த மண்ணில் இந்திய அணி இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது என சில நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News November 25, 2025

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உயரிய விருது

image

சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான ‘வெள்ளி யானை’ விருதினை அன்பில் மகேஸ் பெறுகிறார். உ.பி.,யின் லக்னோவில் நாளை (நவ.26) நடைபெறும் 19-வது தேசிய ஜாம்போரி விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இவ்விருதை அவருக்கு வழங்கவுள்ளார். TN சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக இருக்கும் அன்பில், இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தியதற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

error: Content is protected !!