News May 7, 2025
தீவிரவாதிகள் அழியும் வரை நிறுத்த மாட்டோம்: அமித்ஷா

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் என்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுவெளியில் பேசியுள்ளார். தீவிரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம் என்று சூளுரைத்த அவர், பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது; பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
ராகுல் காந்திக்கு ஷாகித் அஃப்ரிடி ஆதரவு

பாஜக ஆட்சிக்கு வர, இந்து – முஸ்லீம் மத அரசியலை தொடர்ந்து கையிலெடுப்பதாக பாக்., முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார். ஆனால், ராகுல் காந்தி ஒட்டுமொத்த உலகத்துடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாக ஆதரவு தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையில் IND vs PAK போட்டி முடிவில், இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததன் பின்னணியில் மேலிட உத்தரவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News September 16, 2025
நாளை புரட்டாசி.. பெருமாளை வழிபட உகந்த நேரம் ?

பெருமாளுக்கு உகந்த மாதங்களில் ஒன்றாக கருதப்படும் புரட்டாசி நாளை தொடங்குகிறது. பெருமாளை வழிபட உகந்த நேரம்:
காலை 06 முதல் 7:20 வரை, காலை 09:10 முதல் 10:20 வரை மாலை 6 மணிக்கு மேல், இந்த ஆண்டு புதன்கிழமையில் துவங்குவதால் முடிந்தவர்கள் காலையிலேயே வழிபாடு செய்து, விரதத்தை துவக்கி விடலாம். முடியாதவர்கள் மாலையில் கூட பெருமாள் வழிபாட்டினை செய்து கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 16, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா? REQUEST

அக்.20-ல் திங்களன்று தீபாவளி வருவதால் 3 நாள்கள் தொடர் விடுமுறை. இந்நிலையில், கடந்த ஆண்டைபோல் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்குமாறு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடைசி நேரத்தில் அறிவிக்காமல், முன்னரே அறிவித்தால் ஊர்களுக்குச் செல்ல டிக்கெட் புக்கிங் செய்ய வசதியாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை பரிசீலித்து அரசு விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. SHARE