News May 15, 2024
இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம்

இந்தியா பலவீனமான நாடு அல்ல, உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறிவிட்டது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும் என பலர் தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிக்கின்றனர் என எதிர்கட்சிகளை விமர்சித்தார். மேலும், பாஜக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் என்றும், எப்போதும் இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
Similar News
News December 21, 2025
தி.மலை: சொந்த ஊரில் ரூ.18,000 சம்பளத்துடன் சூப்பர் வேலை!

தி.மலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு திட்டத்தின் கீழ் காலியாக ICTC ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, உளவியல், ஆந்த்ரோபோலாஜி (அ) நர்சிங்கில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் டிச.22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு இந்த <
News December 21, 2025
தனியார் பள்ளிகளில் வரப்போகும் மாற்றம்..!

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண்ணை மாணவர்களே பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கி மூலம் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை என்பதால் நாளை முதல் இது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. மாணவர்களே, ரெடியா?
News December 21, 2025
மெகா வெற்றியை நோக்கி முன்னேறும் பாஜக கூட்டணி

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மெகா வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 246 நகராட்சி மற்றும் 42 நகர பஞ்சாயத்துகளுக்கான தேர்தலில் மகாயுதி 214, காங்., தலைமையிலான மகா விகாஸ் அகாடி 52 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அடுத்த மாதம் பிரஹன் மும்பை மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


