News April 15, 2024
மணிப்பூரை பிரிக்க விட மாட்டோம்

மணிப்பூரை பிரிக்க விட மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூரில் பிரசாரம் செய்த அவர், மக்களவைத் தேர்தல் மணிப்பூரை பிரிக்க நினைப்பவர்களுக்கும், ஒற்றுமையை உருவாக்க நினைப்பவர்களுக்கும் இடையிலான போர் என்றார். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்தார். மணிப்பூர் கலவரத்தில் குறைந்தது 220 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 10, 2025
Cinema Roundup: ‘ஜனநாயகன்’ இசைவெளியீட்டு விழா அப்டேட்

*பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரவீன் ராஜ் எலிமினேட் ஆனார். *‘ஜனநாயகன்’ இசைவெளியீட்டு விழா, டிச.27-ல் மலேசியாவில் நடைபெறும் என தகவல். *சித்தார்த்தின் அடுத்த படத்தை ‘டக்கர்’ பட இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்குகிறார். *மகேஷ்பாபு நடிப்பில் ராஜமௌலி இயக்கும் படத்தில் பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் நடிப்பதாக தகவல். *ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.
News November 10, 2025
SA உடனான இந்தியாவின் மோசமான ரெக்கார்ட்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி உள்ளநிலையில், அந்த அணி உடனான இந்திய அணியின் கடந்த கால ரெக்கார்ட்கள் கவலையை கொடுக்கின்றனர். இதுவரை இரு அணிகளும் 16 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளனர். அதில் 8 முறை தென்னாப்பிரிக்கா அணியே வெற்றி பெற்றுள்ளது. 4 முறை மட்டுமே இந்திய அணி வென்ற நிலையில், 4 தொடர் டிராவில் முடிந்துள்ளது.
News November 10, 2025
நவம்பர் 10: வரலாற்றில் இன்று

*1910 – எழுத்தாளர் சாண்டில்யன் பிறந்தநாள். *1958 – நடிகர் ஆனந்தராஜ் பிறந்தநாள். *1975 – கவிஞர் தாமரை பிறந்தநாள். *1983 – விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது. *1999 – பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் PM நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. *2019 – இந்திய தேர்தலில் சீர்திருத்தம் மேற்கொண்ட முன்னாள் ஐஏஎஸ் டி.என்.சேஷன் காலமானார்.


