News March 16, 2024
புதிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம்

தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். புதிய கல்விக்கொள்கை வேறு, பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் வேறு. புதிய கல்விக்கொள்கையை பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு குழு அமைத்துள்ளோம். அக்குழுவின் அறிக்கைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Similar News
News September 3, 2025
இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு.. குவியும் வாழ்த்து

உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளது. ‘இட்லி கடை’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள அவர், தொடர்ந்து பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், அவருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்பநிதியின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் என சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதேபோல், திமுகவினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
News September 3, 2025
யாரும் எதிர்பாராத காம்போ.. புது படம் தொடங்கிருச்சு!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் வழக்கறிஞர்களாக நடிக்கின்றனர். இந்த படம் கோர்ட் ரூம் டிராமாவாக எடுக்கப்படவுள்ளது. இதில் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், தீபா, மாலா பார்வதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
News September 3, 2025
நேருவின் பங்களா ₹1,100 கோடிக்கு விற்பனை

முன்னாள் PM நேருவின் பங்களா ₹1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் LBZ பகுதியில் 3.7 ஏக்கரில் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ளது. இந்த பங்களா, ராஜஸ்தான் அரசு குடும்பத்திற்கு சொந்தமானது. இந்த பங்களாவிற்கு ₹1,400 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 2024 முதல் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது இதை வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.