News March 29, 2024

100 நாள் வேலை ஊதியத்தை ரூ.400ஆக உயர்த்துவோம்

image

100 நாள் வேலைத் திட்ட ஊதியம், மத்தியில் I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்தால் ரூ.400ஆக உயர்த்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “தேசிய ஊரக வேலை திட்ட சம்பளத்தை மோடி ரூ.7 உயர்த்தியுள்ளார். இந்த பெரிய நிதியை வைத்து, என்ன செய்வீர்கள் என அவர் கேட்டாலும் கேட்கக்கூடும். I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்த முதல்நாளே அந்த சம்பளம் ரூ.400ஆக உயர்த்தப்படும்” எனக் கூறியுள்ளார்.

Similar News

News December 27, 2025

நாளை டிரம்ப்பை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி

image

நாளை USA-ன் ஃபுளோரிடாவில் அதிபர் டிரம்பை சந்திக்கவுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட 20 நிபந்தனைகளில் 90%-ஐ ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்த சந்திப்பின்போது வர்த்தகம் உள்பட பிற விவகாரங்கள் பற்றியும் பேசவுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் போர் முடிவுக்கு வருமா?

News December 27, 2025

புத்தர் பொன்மொழிகள்

image

*மாற்றம் ஒருபோதும் வலிமிகுந்ததல்ல, மாற்றத்தை எதிர்ப்பது மட்டுமே வலிமிகுந்தது.
*எப்படி எதிர்வினையாற்றுவது என்று கற்றுக்கொள்ளாதீர்கள். எப்படி பதிலளிப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள்.
*எல்லோருடைய வாழ்க்கையும் நிரந்தரமற்றது. பிறகு ஏன் நிரந்தரமற்ற விடயங்களுக்காக கவலைப்பட வேண்டும்.
*நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், எங்கள் செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.

News December 27, 2025

விஜய்க்கு கீழ் யாரும் இருப்பார்களா? சரத்குமார்

image

விஜய் உடன் பாஜக கூட்டணி அமைக்காது என்பது தனது கருத்து என சரத்குமார் கூறியுள்ளார். தவெக பொதுக்குழுவில் விஜய்யின் தலைமையை ஏற்பவர்களுடன் கூட்டணி என சொன்ன பிறகு, அவருக்கு கீழ் யாரும் சென்று இருப்பார்களே என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், SM இல்லாத காலத்தில் தனக்கும் கூட்டம் கூடியதாகவும், தற்போது மக்களை சந்திக்காத விஜய், திடீரென வரும்போது அவரை பார்க்க கூட்டம் வருவது இயல்பு என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!