News October 27, 2024

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.. ஈரான் ஆவேசம்

image

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து இஸ்ரேலால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்.1இல் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் இன்று ஈரானில் தாக்குதல் நடத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், தங்களை தற்காத்து கொள்ளும் உரிமை, பதிலடி கொடுக்க வேண்டிய கடமை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News January 22, 2026

ADMK போல இரவோடு இரவாக கைது செய்யவில்லை: CM

image

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுடன் TN அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சட்டமன்றத்தில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக ஆட்சி போல அரசு ஊழியர்களை இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைக்கவில்லை எனவும் பதிலளித்துள்ளார். ஊழியர்களின் போராட்டத்தை வேடிக்கை பார்க்க மாட்டோம் எனவும் அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து கொச்சைப்படுத்தும் அளவுக்கு EPS பேசியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

News January 22, 2026

இனி வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு… நோ டென்ஷன்!

image

பத்திரப் பதிவுத்துறையின் 18 சேவைகளை உள்ளடக்கிய ஸ்டார் 3.0 செயல் திட்டத்தினை CM ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் வீட்டிலிருந்தபடியே காகிதமில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், திருமணப் பதிவு உள்பட முக்கிய சேவைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் எந்த முறைகேடும் இன்றி தொழில்நுட்ப உதவியுடனும், வெளிப்படை தன்மையுடன் பத்திரப்பதிவு நடைபெற வேண்டி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

BREAKING: நடிகர் முரளி கிருஷ்ணா காலமானார்

image

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா (65) காலமானார். ஜானகியின் ஒரே மகனான இவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். அத்துடன், ’விநாயகுடு’, ‘மெல்லபுவு’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், ‘கூலிங் கிளாஸ்’ என்ற மலையாள படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு, திரையுலகினர் மற்றும் எஸ்.ஜானகியின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!