News March 13, 2025
மகளிருக்கு மாதம் ₹2,500 கொடுப்போம்: அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால் மகளிருக்கு மாதம் ₹2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்துள்ளாா். ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும், அதற்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் எனவும், கல்வி மற்றும் மருத்துவ துறையில் உயர்ந்த தரம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
Similar News
News March 13, 2025
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் <
News March 13, 2025
கும்பமேளா லக்: படகோட்டிக்கு ₹12 கோடிக்கு IT நோட்டீஸ்

மகாகும்பமேளாவில் ₹30 கோடி வரையில் சம்பாதித்த பிண்டு மஹ்ரா என்னும் படகோட்டியின் அதிர்ஷ்டமே, துரதிர்ஷ்டமாக மாறியுள்ளது. அவரை ₹12.8 கோடி வரி கட்டும் படி, IT துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது சரிதானா என்று நெட்டிசன்கள் கேட்கின்றனர். எந்தவித மோசடியும் அவர் செய்யவில்லை, கிடைத்த வாய்ப்பைப் சரியாக பயன்படுத்தினார். அதற்கு இப்படியா என வினவுகின்றனர். இந்த வரி விதிப்பு சரிதானா?
News March 13, 2025
இந்தியாவில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் மின்னுமா?

குக்கிராமங்களில் கூட இணைய சேவையை வழங்க ஏர்டெலும், ஜியோவும் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் சேவை ஒப்பந்தத்தை பெற்றுள்ளன. பக்கத்து நாடான பூட்டானில் ஸ்டார்லிங்கின் இணைய சேவை மாதம் ₹3,000க்கு கிடைக்கிறது. இந்தியாவில் ₹4,200க்கு கிடைக்கலாம். ஆனால், ஸ்டார்லிங்கை விட குறைவான விலையிலும், அதிவேகத்திலும் இங்குள்ள பைபர் பிராட்பேண்டிலேயே இணைய சேவை கிடைக்கிறது. ஸ்டார்லிங்க் மின்னுமா? உங்கள் கருத்து என்ன?