News March 21, 2024
வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம்

அமலாக்கத்துறை விசாரணை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் முதல் முறையாக மனந்திறந்து பேசியுள்ளார். அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசிய அவர், “அதிமுக நிர்வாகிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே நெருக்கடிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக. அதிமுகவை பலவீனமான கட்சி என்று கருத வேண்டாம்” என்றார்.
Similar News
News January 9, 2026
சிங்க பெண்களின் ஆட்டம் இன்று தொடக்கம்

5 அணிகள் இடையிலான மகளிர் பிரிமீயர் லீக்(WPL) நவிமும்பையில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியே ஹர்மன்பிரீத் கவுர்(MI), ஸ்மிருதி மந்தனா(RCB) இடையே நடப்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை MI 2 முறையும், RCB ஒரு முறையும் WPL கோப்பையை வென்றுள்ளன.
News January 9, 2026
ஜனநாயகன் பிரச்னை இன்று முடிவுக்கு வருமா?

தணிக்கை சான்றிதழ் சிக்கல் காரணமாக இன்று வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’ படம் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமாக அமைந்தால் படம் பொங்கலுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. உள்நோக்கத்துடனேயே சென்சார் போர்டு செயல்படுவதாக கோர்ட்டில் ‘ஜனநாயகன்’ படக்குழு வாதிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 9, 2026
தொகுதி பங்கீடு குறித்து இன்று அதிமுக – பாஜக ஆலோசனை

அதிமுக – பாஜக கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து நேற்று முன்தினம் அமித்ஷாவுடன் EPS முக்கிய ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று EPS-ஐ அவரது வீட்டில் வைத்து நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தொகுதி பங்கீடு, கூட்டணி விரிவாக்கம், பரப்புரை திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


