News May 29, 2024

மோடிக்கு கோவில் கட்டுவோம்: மம்தா பானர்ஜி

image

தன்னை பரமாத்மா தான் பூமிக்கு அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி, ஒருவர் தன்னை தானே கடவுள் என்பதாகவும், மற்றொருவர் ஜெகன்நாதரே அவரின் பக்தர் என கூறுவதாகவும் சாடினார். கடவுள் என்றால் அரசியல் செய்யக் கூடாது, கலவரத்தை தூண்டக்கூடாது என்று கூறிய அவர், அவருக்கு தாங்கள் கோவில் கட்டித் தருவதாகவும், நாட்டை தொந்தரவு செய்யாமல் அங்கேயே இருக்குமாறும் விமர்சித்தார்.

Similar News

News September 6, 2025

BREAKING: செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை?

image

தலைமையின் அனுமதியின்றி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து EPS ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. திண்டுக்கல்லில், இன்று காலை <<17627735>>மூத்த தலைவர்களுடன்<<>> அவசர ஆலோசனையில் ஈடுபட்ட அவர், செங்கோட்டையனின் பேச்சு தொடர்பாக, அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார். மேலும், மற்ற தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்த உள்ளாராம்.

News September 6, 2025

மோடியின் அமெரிக்க பயணம் ரத்து

image

நியூயார்க்கில், இம்மாத இறுதியில் நடைபெறும் ஐநாவின் பொதுசபை கூட்டத்தில், PM மோடி கலந்துகொள்ள இருந்தார். ஆனால் அந்த பயணம் ரத்தாவதாக சமீபத்தில் செய்தி வந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் பேச்சாளர்கள் பட்டியலில், மோடியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என தெரிகிறது. பயணம் ரத்தானதற்கு டிரம்ப்பின் வரி விதிப்பும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

News September 6, 2025

சிலிண்டர் சீக்கிரமா காலியாகிறதா?

image

◆அரிசி, பருப்பு, சுண்டல் போன்றவற்றை நீரில் ஊற வைத்து, அடுப்பில் வைத்தால் சீக்கிரமாக வெந்து விடும் ◆சின்ன வளைவான பாத்திரங்களை பயன்படுத்தினால், தீ வேகமாக பரவி சமையல் சீக்கிரம் முடியும் ◆பர்னர் சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள் ◆பாத்திரங்களை கழுவியவுடன், ஈரத்தோட அடுப்பில் வைக்காதீர்கள் ◆பிரிட்ஜில் இருந்து எடுத்த காய்கறிகளை சிறிது நேரம் வெளியில் வைத்துவிட்டு உபயோகப்படுத்தவும். SHARE IT.

error: Content is protected !!