News December 20, 2024
பொன்னான வாய்ப்பை வீணடித்தோம்: ஜக்தீப் தன்கர்

பார்லிமென்ட் நடவடிக்கைக்கு ஏற்பட்ட இடையூறு மூலம் மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகிறோம் என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்களின் நன்மைக்காக சேவை செய்ய கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தோம். எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான இடையூறுகள், ஜனநாயக அமைப்புகளின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன. இது கவலை அளிக்கிறது என்றார்.
Similar News
News July 5, 2025
கச்சத்தீவை விட்டுத் தர மாட்டோம்: இலங்கை அமைச்சர்

கச்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து குரல் எழுந்துள்ளது. இந்நிலையில், மீனவர் பிரச்னையை தீர்க்க தூதரக அளவிலான பேச்சுக்கு தயாராக உள்ளோம். ஆனால், கச்சத்தீவை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டும் என்று இலங்கை அமைச்சர் விஜிதா ஹெராத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News July 5, 2025
RECORD: லெஜண்ட்களை முந்திய ஜெய்ஸ்வால்!

ENG-க்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 28 ரன்களில் அவுட்டாகினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில்(40 இன்னிங்ஸ்) 2000 ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். முன்னதாக சேவாக் & டிராவிட் 40 இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்தனர். இதன் மூலம் சச்சின், கம்பீர், கவாஸ்கர் போன்ற லெஜெண்ட்களின் சாதனையை முந்தியுள்ளார்.