News June 6, 2024
ஆதரவு தருகிறோம்… ஆனால்?

தேர்தலில் 240 இடங்களை வென்ற பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில்
சந்திரபாபு நாயுடு & நிதிஷ்குமார் உள்ளனர். NDA கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தபடியாக எம்.பிக்களை கொண்டுள்ள TDP (16) & JDU (12) இதன் காரணமாக பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. TDP சபாநாயகர் & 4 கேபினட் அமைச்சர் பதவிகளும், JDU 3 கேபினட் அமைச்சர் பதவிகளும் பாஜகவிடம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 18, 2025
மத்திய அரசின் உயரிய பொறுப்புகளில் தமிழர்கள்!

நாட்டின் 2-வது உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதிக்கான ரேஸில் சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது. ஏற்கெனவே, மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை இணையமைச்சராக எல்.முருகன் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு(1952–1962) பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு அமைந்துள்ளது.
News August 18, 2025
ராசி பலன்கள் (18.08.2025)

➤ மேஷம் – அச்சம் ➤ ரிஷபம் – சுகம் ➤ மிதுனம் – ஆக்கம் ➤ கடகம் – கவனம் ➤ சிம்மம் – ஆர்வம் ➤ கன்னி – சிரமம் ➤ துலாம் – ஊக்கம் ➤ விருச்சிகம் – நலம் ➤ தனுசு – சுபம் ➤ மகரம் – இரக்கம் ➤ கும்பம் – ஜெயம் ➤ மீனம் – புகழ்.
News August 18, 2025
வடிவேலு மாமா துரோகம் செய்தார்: விஜயகாந்த் மகன்

சொந்த மாமாவைபோல் வடிவேலுவை பார்த்ததாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆனால், வடிவேலு தங்களை ஏமாற்றி விட்டதாகவும், சின்ன வயதிலேயே துரோகத்தை பார்த்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், இப்போது யார் என்ன செய்தால் என்ன என்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது விஜயகாந்தை வடிவேலு கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.