News April 24, 2025
நாங்கள் இந்திய மக்களுடன் நிற்கிறோம்: கம்மின்ஸ்

இக்கடுமையான தருணத்தில் ஆஸ்திரேலியர்களான நாங்கள் இந்திய மக்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என SRH கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். பஹல்காமில் நடந்தது மனவேதனை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலுக்கு உலகம் முழுவதில் இருந்தும் இந்திய மக்களுக்கு ஆதரவு குரல்கள் வரும் நிலையில், கம்மின்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News April 24, 2025
பயங்கரவாதம்.. ஓரணியில் நிற்க வேண்டும்: ஷமி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்தை கண்டித்து அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த அவர், இத்தகைய வன்முறை நமது சமூக கட்டமைப்பை மட்டுப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
News April 24, 2025
காதல் சின்னத்தை ரசித்த USA துணை அதிபர்..!

இந்தியாவிற்கு குடும்பத்துடன் சுற்றுப் பயணம் வந்துள்ள USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்து மகிழ்ந்துள்ளார். கடந்த 21-ம் தேதி இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து, PM மோடி விருந்தளித்தார். இந்நிலையில், மனைவி உஷா, 3 குழந்தைகளுடன் சென்று ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை அவர் சுற்றிப் பார்த்தார். இதனையடுத்து, தாஜ்மஹால் முன்பு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
News April 24, 2025
ஏப்ரல் 24: வரலாற்றில் இன்று

▶ தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். ▶ 1973 – கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள். ▶ 1934 – எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள். ▶ 2013 – வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர். ▶ 2004 – லிபியா மீதான 18 ஆண்டுகால பொருளாதார தடையை நீக்கியது அமெரிக்கா.