News August 31, 2025

பிஹார் போல் கோட்டை விட கூடாது: KN நேரு

image

வாக்காளர் பட்டியலில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என DMK நிர்வாகிகளுக்கு KN நேரு அறிவுறுத்தியுள்ளார். பிஹார் போல் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக்கூடாது எனவும் ஒன்றிய செயலாளர்கள் முன்னெச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், பூத் கமிட்டி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தும் பணியில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.

Similar News

News September 2, 2025

இந்தியா கோல் மழை பொழிந்து வெற்றி

image

பிஹாரில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. இன்று குரூப் ஏ பிரிவில் இந்தியா-கஜகஸ்தான் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 15 கோல் அடித்தது. இறுதிவரை கஜகஸ்தான் அணி பதில் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்தியா 15-0 என்ற கணக்கில் வென்றது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா கொரியாவுடன் 3ஆம் தேதியும், மலேசியாவுடன் 4ஆம் தேதியும் மோதவுள்ளது.

News September 1, 2025

ராசி பலன்கள் (02.09.2025)

image

➤ மேஷம் – பொறுமை ➤ ரிஷபம் – நற்செயல் ➤ மிதுனம் – லாபம் ➤ கடகம் – ஆதரவு ➤ சிம்மம் – வரவு ➤ கன்னி – கவனம் ➤ துலாம் – செலவு ➤ விருச்சிகம் – புகழ் ➤ தனுசு – பாராட்டு ➤ மகரம் – மகிழ்ச்சி ➤ கும்பம் – அன்பு ➤ மீனம் – பக்தி.

News September 1, 2025

தம்பதிகளே… இதுக்கு மட்டும் கூச்சப்படாதீங்க!

image

கணவன்- மனைவி, ஒரு விஷயத்துக்காக மட்டும் எப்போதும் தயங்கவே கூடாது. Sorry கேட்க ஒருபோதும் யோசிக்காதீங்க. ஈகோ, கோபம் எதுவானாலும் மன்னிப்புக் கேட்டுவிட்டால், எல்லாமே சரியாகிவிடும். கணவன் வந்து கேட்கட்டும், மனைவி முதலில் கேட்கட்டும் என ஒத்திப் போடுவதை தவிருங்கள். இருவரும் பேசாமல் இருப்பதால் எதுவும் மாறாது. Sorry சொல்லி உணர்வை வெளிப்படுத்துங்க. எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை உணர்வீர்கள்.

error: Content is protected !!