News January 23, 2025
சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்க்கிறோம்: ஜெய்சங்கர்

சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். USAவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் குடியிருந்தால், அவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஒரு நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுவது நல்லதல்ல என்றார். முன்னதாக இந்தியர்கள் 18,000 பேர் USAவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 3, 2025
இந்தியா வரும் புடின்.. 4 டஜன் ஆட்களை இறக்கிய ரஷ்யா

ரஷ்ய அதிபர் புடின் நாளை இந்தியா வருவதை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. NSG கமாண்டோக்கள், ஸ்னைப்பர்ஸ், டிரோன்கள், AI கண்காணிப்பு என 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதுதவிர 40-க்கு மேற்பட்ட ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளும் டெல்லி வந்துள்ளனர். முக்கியமாக, <<18411863>>புடின்<<>> பயன்படுத்தும் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட Aurus Senat சொகுசு காரும் இந்தியா வருகிறது.
News December 3, 2025
புடின் வருகை.. என்னவெல்லாம் நடக்கலாம்?

ரஷ்ய அதிபர் புடின் நாளை இந்தியா வருகிறார். அப்போது ஆயுத உற்பத்தி, அணுசக்தி, டெக் என பல துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யாவின் அதிநவீன S-500 வான் பாதுகாப்பு அமைப்பு, Su-57 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போடப்படும் என கூறப்படுகிறது. அதேபோல், வர்த்தகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 3, 2025
பண மழை கொட்ட போகும் 3 ராசிகள்

வரும் டிச.6-ம் தேதி, புதன் பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சியாவார். இதனால் பின்வரும் 3 ராசியினர் அதிக நன்மைகள் பெறுவர்: *விருச்சிகம்- பணியில் பதவி, சம்பள உயர்வு, தொழிலில் லாபம் கிடைக்கும். *திருமண வாழ்க்கை சிறக்கும். *மகரம்- வருமானம் கணிசமாக அதிகரிக்கும், தொழிலில் லாபம் கூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உண்டு. *கும்பம்- வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.


