News August 25, 2025
ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் வேண்டும்: சத்யராஜ்

ஆணவக் கொலைகள் நடப்பதற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சத்யராஜ், அதனை தடுக்க சட்ட இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், காதல் என்பது மிகவும் எளிதான விஷயம் என்றும், இதற்கெல்லாம் கொலை செய்வது நியாயமில்லை என்றும் தெரிவித்தார். மனித வாழ்க்கையில் காதலும் காமமும் அத்தியாவசியமான விஷயம் என்றும் நடிகர் சத்யராஜ் குறிப்பிட்டார்.
Similar News
News August 25, 2025
GATE EXAM இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

IIT உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ME, M.TECH, MS, MA ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு ‘கேட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இத்தேர்வுக்கான விண்ணப் பதிவு இன்று தொடங்கி, செப்டம்பர் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் <
News August 25, 2025
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: IMD

தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 438 ▶குறள்:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று.
▶ பொருள்: எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.