News February 13, 2025

சிறந்த அணியுடன் தான் தோற்றோம்: பட்லர்

image

ODI தொடரில் IND அணி ஒயிட் வாஷ் செய்த நிலையில், ஒரு சிறந்த அணியால் தான் தாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம் என ENG கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். தங்களுடைய அணுகுமுறை சரிதான், அதில் எந்த தவறும் இல்லை எனவும், ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் தவறு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்திய அணி தங்களுக்கு பல சவால்களை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 13, 2025

RCB அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார்

image

IPL-2025 சீசனுக்கான RCB அணியின் கேப்டனாக ரஜத் படிதார்(31) நியமிக்கப்பட்டுள்ளார். அவர், 2021 முதல் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இனியாவது ‘ஈ சாலா கப் நம்தே’ நடக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இம்முறை ரிடெய்ன் செய்யப்பட்ட 3 வீரர்களில் ரஜத் படிதாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 13, 2025

பெட்ரோல் காரில் டீசலை நிரப்பினால் என்ன செய்யலாம்?

image

பெட்ரோல் – டீசல் கார்களின் எஞ்சின்கள் வெவ்வேறானவை. எரிபொருளை மாற்றி நிரப்பும் போது, எஞ்சின்கள் கடுமையாக சேதமடையும். இதை பழுதுபார்ப்பதற்கு அதிக பணம் செலவாகும். எனவே, மாற்றி நிரப்பியது தெரியவந்தால், எக்காரணத்தைக் கொண்டும் காரை ஸ்டார்ட் செய்யக் கூடாது. மற்றொரு வாகனத்தின் மூலம் உங்கள் காரை அருகில் உள்ள கார் சேவை மையத்திற்கு இழுத்து சென்று, எரிபொருள் டேங்கை முழுமையாக காலி செய்ய வேண்டும்.

News February 13, 2025

அஜித் டிக் பண்ணப் போகும் டைரக்டர் யார்?

image

‘மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் மற்றும் ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா ஆகியோரிடம் நடிகர் அஜித் தரப்பு கதை கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இயக்குநர்களின் படங்களுக்கு அதிக நாள் கால்ஷீட் தேவைப்படாது, அதேபோல் படமும் தரமாக அமைந்துவிடும் என்பதால், தனது ரேஸிங் கெரியருக்கு இடைஞ்சல் வராது என அஜித் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!