News April 25, 2025
பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவினோம்.. PAK ஒப்புதல்

பயங்கரவாத இயக்கங்களுக்கும் PAK-க்கும் உள்ள தொடர்பை, அதன் பாதுகாப்பு அமைச்சரே போட்டு உடைத்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் PAK-க்கு பங்கிருக்கிறது என IND குற்றஞ்சாட்டுகிறது. இந்நிலையில், ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், PAK கடந்த 3 தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தது என அமைச்சர் கவாஜா ஒப்புக்கொண்டுள்ளார். USA, மேற்குலக நாடுகளுக்காகவே PAK இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறினார்.
Similar News
News November 18, 2025
ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு ₹2,000.. வந்தது அப்டேட்

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹2,000 வழங்க CM ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். அதற்கான நிதி ஏற்பாடுகளை செய்யுமாறு நிதித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருப்பதாக தமிழக அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், வழக்கம்போல் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
காங்கிரஸில் சேர விஜய் முயற்சி… பரபரப்பு தகவல்

விஜய் 2010-ல் ராகுலை சந்தித்து காங்கிரஸில் இணைய முன்வந்ததாக ஜோதிமணி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு விஜய் புதியவர் அல்ல, சில காரணங்களால் விஜய் தங்கள் கட்சியில் இணைய முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக, காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா என யூகங்கள் எழுந்த நிலையில், ஜோதிமணி இதனை தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள்(காங்.,) இதுவரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 18, 2025
சற்றுமுன்: வரலாறு காணாத விலை உயர்வு… புதிய உச்சம்

முட்டை கொள்முதல் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 1 முட்டையின் கொள்முதல் விலை ₹6 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டையின் கொள்முதல் விலை ₹6.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விலையில் 1 முட்டை ₹7 – ₹8 வரை விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.


