News September 5, 2025
இந்தியாவை இழந்துவிட்டோம்: டிரம்ப்

இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் அண்மையில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜின்பிங், புடின், மோடி எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து, இந்தியா, ரஷ்யாவிற்கு வளமான வருங்காலம் அமையட்டும் என்றும் அவர் தனது Truth சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவும், ரஷ்யாவும் சீனாவின் பிடியில் சென்றுவிட்டதாக அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
திண்டுக்கல்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
News March 9, 2026
60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கொடூரம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த தம்பதிக்கு நேர்ந்த கொடூரம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. நள்ளிரவில் 70 வயது முதியவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு, அவரது 60 வயது மனைவியான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
News March 9, 2026
வரலாறு காணாத வகையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் சூழலால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசு சரிந்து ₹92.31-ஆக உள்ளது. இதன் எதிரொலியால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக குறைந்து வரும் தங்கம், எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கக்கூடும்.


