News May 26, 2024
எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர்

இளம் இந்திய வீரர்கள் தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என SRH கேப்டன் கம்மின்ஸ் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 2 வருடங்களாக தனக்கு கேப்டன்ஷிப் சிறப்பானதாக அமைந்திருக்கிறது என்றும், ஆனால், இதற்கு முன்பு எந்தவொரு டி20 அணியையும் வழிநடத்தியதில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளதால், இறுதிப்போட்டியில் நிச்சயம் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
உங்களுக்கு அந்த படம் ஞாபகம் இருக்கா?

சினிமாவையும், தமிழக மக்களையும் அவ்வளவு எளிதில் பிரித்திட முடியாது. இதற்கு அரியணை ஏறியவர்களே சாட்சி. அப்படிப்பட்ட சினிமாவில் முதல் முறை நாம் பார்த்த படத்தை கூட மறந்திருப்போம். ஆனால், நமக்கு புரிந்த முதல் சினிமாவை நாம் மறந்திருக்க மாட்டோம். அது நகைச்சுவை, ஃபேமிலி டிராமா, ஃபேண்டஸி என எந்த வகையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி நீங்கள் புரிந்து பார்த்த முதல் சினிமா எது? கமெண்ட் பண்ணுங்க.
News September 16, 2025
பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. உடனே இத பண்ணுங்க!

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் வரும் 30-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்திருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளால், அதிகரிக்கும் மோசடியில் இருந்து தப்பிக்க இந்த அறிவுரை வழங்கியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், அந்தந்த வங்கிக் கணக்குகளில் தனித்தனியாக KYC அப்டேட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News September 16, 2025
இந்திய அணியின் புதிய ஸ்பான்சர் யாரு தெரியுமா?

ஆன்லைன் கேமிங் தடை சட்டம் அமலான நிலையில், Dream 11 உடனான ஒப்பந்தத்தை BCCI நிறுத்தியது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸிக்கான ஸ்பான்சர்ஷிப்பை Apollo Tyres பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு போட்டிக்கு ₹4.5 கோடி அளவில் ஜெர்ஸிக்கான ஸ்பான்சர்ஷிப்பை இந்நிறுவனம் வழங்கவுள்ளதாம். 2027 வரை ₹579 கோடிக்கு இந்நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.